ADDED : செப் 12, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மாநில
அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டி,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
இதில் ஜூடோ போட்டியில்
ஈரோடு மாவட்டம் ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 20 மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர். பிளஸ் 2 மாணவன் பரணி, 81 கிலோ எடை
பிரிவில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தேசிய ஜூடோ போட்டியில்
விளையாட தகுதி பெற்றார். எட்டாம் வகுப்பு மாணவி தாரிகா, 14 வயதுக்கு
உட்பட்ட பிரிவில் இரண்டாமிடமும், பிளஸ் 1 மாணவன் கனிஷ்க், 19 வயதுக்கு
உட்பட்ட பிரிவில் மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ,
மாணவியர், உடற்கல்வி ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, புஷ்பவதி, பள்ளி
தலைமையாசிரியர் பிரகாசம் ஆகியோரை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் மான்விழி பாராட்டினார்.
