ADDED : ஜூன் 03, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை (4) மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் காலை, 11:00 மணிக்கு, 'செயற்பொறியாளர், கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்., சாலை ஈரோடு-9' என்ற முகவரியில் நடக்கிறது.
ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி மின் பயனீட்டாளர் தங்கள் கோரிக்கை, குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.