ADDED : செப் 16, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம், பென்ஷனர் ஐக்கிய சங்கம், ஐ.டி.ஐ., படித்த வேலை வேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில், ஈரோடு, ஈ.வி.என்.சாலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவிக்கு வாரிய பணி விதிப்படி இந்தாண்டுக்கு, 12,500 ஐ.டி.ஐ., படித்தவர்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார்.அதற்கு மாறாக சட்டசபையில், 'ஸ்கில்டு லேபர்'களையும், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டது பாரபட்சமானது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
