/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் பல இடங்களில் மின் கம்பம் சேதம் பலத்த காற்று வீசும்போது அசைவதால் அச்சம்

ADDED : டிச 15, 2025 06:13 AM
அந்தியூர்: அந்தியூர் பேரூராட்சியில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், மின் கம்பம் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது.
அந்தியூர் பேரூராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதற்காக பேரூராட்-சியின் பல்வேறு இடங்களில் நுாற்றுக்கணக்கான மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பவானி செல்லும் வழி, தவிட்டுப்பாளையம் பூக்கடை கார்னர், ஆப்பக்கூடல் ரோடு, தவிட்டுப்பாளைம் மூப்பனார் சிலையிலிருந்து மேற்கே ஒரு கம்பம் என, பத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் அடியில் கான்கிரீட் சேதமடைந்து அபாயகரமாக உள்ளது. அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலர்களுக்கு புகார் கூறியும் உரிய நடவடிக்கை இல்லை.இதுகுறித்து பூக்கடை கார்னர் பகுதி மக்கள் கூறியதாவது: பல மாதங்களாக பூக்கடை கார்னர், ஆப்பக்கூடல் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று கம்பங்களின் அடியில் கான்கிரீட் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. காற்று பல-மாக வீசினால் கம்பம்
அசைகிறது. இவ்வாறு கூறினர்.