ADDED : டிச 15, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், திருவிளக்கு பூஜை மஹா உற்சவ விழா ஊர்வலம் நேற்று நடந்தது. வ.உ.சி., பூங்கா ஆஞ்-சநேயர் கோவில் வளாகத்தின் முன், ஐயப்ப சாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் உற்சவ சிலையை வைத்து தீபாராதனை காண்பித்து ஊர்வலம் துவங்கியது. இதில் கலந்து கொண்ட நுாற்றுக்கணக்கான பெண்கள், கையில் விளக்குகள் ஏந்தி சரண கோஷம் எழுப்பியபடி தேருக்கு முன்பாக நடந்து சென்றனர். திருநகர் காலனி, கருங்கல்பாளையம் வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின் ஐயப்பனுக்கு பூஜை செய்து
வழிபாடு நடந்தது.

