/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோட்டத்தில் காவல் காத்த விவசாயியை தாக்கிய யானை
/
தோட்டத்தில் காவல் காத்த விவசாயியை தாக்கிய யானை
ADDED : அக் 08, 2025 01:10 AM
சத்தியமங்கலம், கடம்பூர் மலையை அடுத்த அணைக்கரையை சேர்ந்த விவசாயி ராமன், 50; மக்காச்சோள காட்டுக்கு காவல் காக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த இரண்டு யானைகள், விளை நிலத்தில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்தன.பேட்டரி போட்டு பார்த்த போது திடீரென ஒரு யானை ராமனை துரத்தி துாக்கி வீசி சென்றது. படுகாயமடைந்த ராமன் காட்டில் மயங்கி கிடந்தார்.
நேற்று காலை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச்சென்றனர்.அங்கு கிடந்தவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.