தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கரும்பு லாரியை மறித்த யானை பட்டாசு வெடித்தும் அசரவில்லை

கரும்பு லாரியை மறித்த யானை பட்டாசு வெடித்தும் அசரவில்லை

கரும்பு லாரியை மறித்த யானை பட்டாசு வெடித்தும் அசரவில்லை


ADDED : அக் 29, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில் இருந்து தினமும், லாரிகளில் கரும்புகளை ஏற்றி சத்தியமங்கலத்துக்கு செல்வது வழக்கம். அப்போது, பல இடங்களில் யானைகள் தனியாகவும், கூட்டத்துடனும் சென்று, லாரிகளை வழி மறித்து கரும்புகளை சாப்பிடுவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் மைசூரு – -ஆசனுார் செல்லும் சாலையில் வந்த கரும்பு லாரியை, வழிமறித்து ஒற்றை யானை கரும்பை உருவி சாப்பிட்டது. இதையறிந்த வனத்துறை பணியாளர் ஒருவர், பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றார். யானை எதற்கும் அசராமல் நின்று கொண்டே இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us