ADDED : அக் 29, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தேசிய அளவில் அக்., 26 முதல் நவ., 1 வரை, 'விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்காக, ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் 'செழிப்புக்கான நேர்மை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஈரோடு வருமான வரித்துறை அலுவலகத்தில் துவங்கிய பேரணி, சூரம்பட்டி நால் ரோடு, ஈ.வி.என்., சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தை அடைந்தது. விஜிலென்ஸ் பிரிவு ஆய்வாளர் ரேகா தலைமை வகித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள்,
ஊழியர்கள் பங்கேற்றனர்.
