/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோ-ஆப்டெக்ஸ் மூலம் பொங்கல் பரிசுத்தொகை ஜவுளியாக வாங்க வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

ADDED : ஜன 07, 2024 10:43 AM
ஈரோடு: பொங்கல் பரிசுத்தொகையாக, தமிழக அரசு வழங்கும், 1,000 ரூபாய்க்கு பதிலாக கோ-ஆப்டெக்ஸ், சிந்தாமணியில் பொருட்கள் வாங்கும் வகையில், டோக்கனாக வழங்க அரசு முன்வர வேண்டும் என, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
இதுபற்றி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கந்தவேல், அனுப்பிய மனுவில் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசுத்தொகையை, ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணி எடுக்க வசதியாகவும், சிந்தாமணி போன்ற அரசின் கூட்டுறவு பண்டக சாலைகளில் மளிகை உள்ளிட்ட தேவையான பொருட்களை கொள்முதல் செய்யவும் டோக்கனாக வழங்கலாம். அல்லது 500 ரூபாய் வீதம், 2 டோக்கன் வழங்கி கோ-ஆப்டெக்ஸில் 500 ரூபாய்க்கு ஜவுளி, சிந்தாமணி போன்ற கூட்டுறவு சங்கங்களில், 500 ரூபாய்க்கு மளிகை வாங்க வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் கோ-ஆப்டெக்ஸ், சிந்தாமணி போன்ற கூட்டுறவு நிறுவனம் வளர்ச்சி அடையும். இதுபற்றி முதல்வர் பரிசீலித்து, திட்டத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.