/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் காலி பாட்டில் பெறும் விவகாரம் பயிற்சி கூட்டத்தை புறக்கணித்த ஊழியர்கள்
/
டாஸ்மாக் காலி பாட்டில் பெறும் விவகாரம் பயிற்சி கூட்டத்தை புறக்கணித்த ஊழியர்கள்
டாஸ்மாக் காலி பாட்டில் பெறும் விவகாரம் பயிற்சி கூட்டத்தை புறக்கணித்த ஊழியர்கள்
டாஸ்மாக் காலி பாட்டில் பெறும் விவகாரம் பயிற்சி கூட்டத்தை புறக்கணித்த ஊழியர்கள்
ADDED : நவ 28, 2025 12:52 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர், ஊழியர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெறவதற்கான பயிற்சி, ஈரோடு அருகே ஆர்.என்.புதுாரில் நேற்று நடந்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர் குணசேகரன், பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். இந்நிலையில் எல்.பி.எப்., - சி.ஐ.டி.யு., - ஏ.டி.பி., - பி.டி.எஸ்., - பி.எம்.எஸ்., சங்க நிர்வாகிகள், எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்து கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியர்களாக, 2006ல் சேர்ந்தபோது விற்பனைக்காக மட்டுமே சேர்ந்தோம். இன்று வரை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு இல்லை. கடை எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும், குறைந்த ஊழியர்கள் சிரமத்தில் பணி செய்கிறோம்.
இதில் பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து பாட்டில் வழங்குதல், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, பாட்டிலை ஸ்கேன் செய்து வழங்கி,
திரும்ப ஸ்கேன் செய்து பெறுவதில் சிரமம் உள்ளது. காலி பாட்டில் மிகவும் அசுத்தமாகவும், சாக்கடை, உணவு பொருட்கள் பட்டும் மோசமான நிலையில் வருவதை திரும்ப பெறுவதில் சிரமம் உள்ளது. இதை தனியாக டெண்டர் விட்டு, வேறு நபர்கள் மூலம் சேகரித்து கொள்ளலாம். இதற்காக மாவட்ட நிர்வாகத்தால் பெறப்பட்ட அனைத்து பதிவேடு, இயந்திரங்களையும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் திரும்ப நாளை (இன்று) ஒப்படைக்கிறோம். இவ்வாறு
கூறினர்.
மாவட்ட அளவில் உள்ள, 192 டாஸ்மாக் கடை ஊழியர்களும், பயிற்சி கூட்டத்தை புறக்கணித்ததுடன், இன்று திரும்ப ஒப்படைப்பு நிகழ்விலும் பங்கேற்பதாக தெரிவித்தனர்.

