ADDED : ஜன 17, 2026 04:51 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் தனியார் லாட்ஜூம், ஓட்-டலும் செயல்படுகிறது.
ஓட்டல் உரிமையாளரான முத்துக்கவுண்டன்பாளையம் சுகுமார், 43, என்பவர் நேற்று முன்தினம் லாட்ஜ் உரிமையாளரான கொல்-லம்பாளையம் சந்திரசேகரிடம், குறைந்த வாடகைக்கு ரூம் வேண்டுமென கேட்டார்.குறைந்த வாடகையில் ரூம் தர இயலாது என லாட்ஜ் நிர்வாகத்-தினர் மறுத்தனர். பக்கத்தில் ஓட்டல் வைத்துள்ள எனக்கே குறைந்த வாடகைக்கு ரூம் தர மறுக்கிறாயா என பேசி, சுகுமார் வாக்குவாதம் செய்ததால் தகராறு ஏற்பட்டது.
ஓட்டல் ஊழியர்களான ஈரோடு மேட்டுக்கடை லோகநாதன், 36, துாத்துக்குடி ராஜகுரு, 31, கவுதம், 21 ஆகியோர் லாட்ஜ் உரிமை-யாளர் சந்திரசேகர்,
ஊழியர்களான கனிராவுத்தர் குளம் நடராஜ், 27, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் கிருஷ்ணமூர்த்தி, 37, நொச்சிக்காட்-டுவலசு மாதேஸ்வரன், 65, அந்தியூர் குருவரெட்டியூர் தீபன், 30, ஆகியோரும் அடித்து கொண்டனர்.
ஈரோடு, சூரம்பட்டி போலீசார் சமாதானம் செய்து சென்றனர். மீண்டும் நள்ளிரவில் லாட்ஜ் உரிமையாளர் சந்திரசேகர், லாட்ஜ் ஊழியர்கள் சேர்ந்து, ஓட்டலுக்குள் சென்று அங்கிருந்தவர்களை தாக்கினர். இதுபற்றி இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமார், லோக-நாதன், ராஜகுரு, நடராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன், தீபன் என, 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளர் மகன் கவுதம், லாட்ஜ் உரிமையாளர் சந்திர
சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

