/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு அலுவலகங்கள் முன் பதாகை வைத்த ஊழியர்கள்
/
அரசு அலுவலகங்கள் முன் பதாகை வைத்த ஊழியர்கள்
ADDED : அக் 05, 2024 07:15 AM
ஈரோடு: திருநெல்வேலி கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டங்களில் அனைத்து நிலை அலுவலர்களையும் தரக்குறைவாகவும், ஒருமையிலும் வசை பாடியும், பெண் அலுவலர்களையும் கண்ணிய குறைவாக பேசி வருகிறார். மேலும், வருவாய் துறை அலுவலர்கள் மீது பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்கிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன் வரும், 9ம் தேதி மாலை, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி சங்க முடிவின்படி, ஈரோடு மாவட்டத்தில், 10 தாலுகா அலுவலகங்கள், 2 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்ட அறிவிப்பு குறித்த பிரமாண்ட அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர்.