sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு அலுவலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அரசு அலுவலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 28, 2024 02:51 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியு-றுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோட்டில் பல்-வேறு அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு மாவட்ட தொழில் மையம் முன், கிளை தலைவர் மவுலி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்து-ணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், பஞ்., செயலர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உட்-பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால-முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தை, அனைத்து பள்ளிக-ளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அமலாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோல, அரசு ஐ.டி.ஐ., - மாவட்ட வேலைவாய்ப்பு அலு-வலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உட்பட பல்-வேறு அலுவலகங்கள் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் விஜயம னோகரன், மாவட்ட துணைத் தலைவர் ராக்கிமுத்து உட்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us