/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 3 ஆண்டில் 7,870 பேருக்கு பணி'
/
'தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 3 ஆண்டில் 7,870 பேருக்கு பணி'
'தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 3 ஆண்டில் 7,870 பேருக்கு பணி'
'தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 3 ஆண்டில் 7,870 பேருக்கு பணி'
ADDED : அக் 20, 2024 01:15 AM
ஈரோடு, அக். 20-
ஈரோட்டில் மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராதிகா பேசியதாவது:
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தவிர, பெரிய அளவில் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடந்த முகாமில், 1,598 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவ்வாறு பேசினார்.
தலைமை வகித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: இம்முகாமில், 187 தனியார் நிறுவனங்கள், 10,000 பேரை நியமனம் செய்யும் திட்டத்துடன் பங்கேற்றுள்ளனர். பணி வேண்டி, 3,400 பேர் பதிவு செய்து, பங்கேற்றுள்ளனர். பட்டப்படிப்புடன் நிற்காமல், தனித்திறமையை வளர்க்கும் பயிற்சி பெறுங்கள். இவ்வாறு பேசினார்.
பணி நியமன ஆணை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: இதுபோன்ற முகாம்களில் பணி நியமனம் பெறுவோர், அரசு பணிக்கு செல்ல விரும்பினாலும், தொடர்ந்து அதற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். கடந்த, 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மாவட்டத்தில் நடந்த, 13 முகாம்களில், 7,870 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2க்கு பின் உயர் கல்வி படிப்போருக்கு, தமிழக அரசு மாதம், 1,000 ரூபாய் வழங்குவதால் கடந்தாண்டுகளில் கூடுதலாக, 37 சதவீதம் பெண்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் அந்தியூர்
எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.