/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 15, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள், கடந்த சில நாட்களாக நடக்கிறது. இதன்படி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பூக்கடை பகுதியில், கடை முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கான்கிரீட் திட்டு, இரும்பு கூரை அகற்றப்பட்டது.
சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தையும் இடித்து அகற்றினர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

