/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கன்னிவாடி வாரச்சந்தையில் ஆற்றல் உணவகம் திறப்பு
/
கன்னிவாடி வாரச்சந்தையில் ஆற்றல் உணவகம் திறப்பு
ADDED : பிப் 17, 2024 07:25 AM
திருப்பூர் : மூலனுார் ஒன்றியம் கன்னிவாடி வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொது மக்களுக்காக ஆற்றல் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
வியாழன் தோறும் கூடும் சந்தைக்கு, திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். இவர்களுக்கு ஆற்றல் அறக்கட்டளை மூலம் உணவு சேவையை அளிக்கும் வகையில், ௧௦ ரூபாய்க்கு இட்லி வழங்கப்படுகிறது.இதுகுறித்து ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது: ஆற்றல் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலத் திட்டங்களை பல தரப்பு மக்களுக்கு செய்து வருகிறோம். ஏற்கனவே ஆற்றல் உணவகங்கள், ஈரோடு, தாராபுரம், காங்கேயம், குமாரபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது கன்னிவாடி சந்தையில் உணவகத்தை துவங்கியுள்ளோம். இவ்வாறு கூறினார். உணவகத்தை அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மகேந்திரன் தொடங்கி வைத்தார்.இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் மூலனுார் தெற்கு ராஜரத்தினம், மூலனுார் வடக்கு செல்வகுமார், குண்டடம் மேற்கு செந்தில்குமார், தாராபுரம் மேற்கு பாலகுமாரன், தாராபுரம் தெற்கு ரமேஷ், தாராபுரம் கிழக்கு செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.