/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாதாரண நாட்களில் இயங்காத இயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : ஆக 25, 2025 02:39 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன. ஸ்டேஷனில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
ரயில் பயணிகள் பாதுகாப்பு கருதி ஸ்டேஷன், பிளாட்பார்ம் நுழைவு பகுதியில் ஸ்கேனிங் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பயணிகள் உடமையை வைக்க வேண்டும். இந்த இயந்-திரத்தில் வெடிகுண்டு, ஆயுதங்கள் இருப்பதை சோதித்த பின் மறுபுறம் உடமைகள் வரும். இதுபோன்ற சோதனையால் பய-ணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த இயந்-திரம் முறையாக பயன்படுத்தபடாமல் முடங்கி கிடக்கிறது.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
ஸ்கேனிங் இயந்திரம் சுதந்திர தினம், குடியரசு தினம், டிச.6 போன்ற முக்கிய நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பிற நாட்களில் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆள் பற்றாக்கு-றையை காரணம் காட்டி இயந்திரத்தை முடக்கி வைத்துள்ளனர். இது பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
இவ்வாறு கூறினர்.