ADDED : மே 28, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே சுந்தராம்பாளையம், ஊமரெட்டியூரை சேர்ந்தவர் தினேஷ் குமார், 36; பொறியியல் பட்டதாரி. திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று காலை, 11:30 மணியளவில் அம்மாபேட்டை-பவானி சாலையில், ஆனந்தம்பாளையத்தில் நடக்கும் கட்டட வேலை மேற்பார்வை பணிக்காக யூனிகான் பைக்கில் சென்றார்.
சிங்கம்பேட்டை கேட் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மஹேந்திரா லேகான் கார், டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இறந்தார். காரை ஓட்டி வந்த சேலம், இரும்பாலை பகுதியை சேர்ந்த செல்வம், 43, மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.