/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.பி.எஸ்., பிறந்தநாள் விழா; திண்டல் முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு

ADDED : மே 15, 2025 01:51 AM
ஈரோடு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி, ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து, அ.தி.மு.க.,வினர் வழிபட்டனர்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., 71வது பிறந்தநாளை அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடினர். இதில், ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழகம் சார்பில், திண்டல் வேலாயுத
சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சூரியம்பாளையம் பகுதி செயலாளரும், முன்னாள் துணை மேயருமான பழனிச்சாமி தலைமையில் தங்க தேரை அ.தி.மு.க.,வினர் இழுத்தனர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதில், பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், தங்கமுத்து, பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ், சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.