/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு இ.பி.எஸ்., ஆதரவாளர் கொண்டாட்டம்
/
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு இ.பி.எஸ்., ஆதரவாளர் கொண்டாட்டம்
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு இ.பி.எஸ்., ஆதரவாளர் கொண்டாட்டம்
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு இ.பி.எஸ்., ஆதரவாளர் கொண்டாட்டம்
ADDED : செப் 07, 2025 12:53 AM
அ.தி.மு.க.,வின் கட்சி பொறுப்புகளில் இருந்து, செங்கோட்டையன் உள்ளிட்ட பலரை, அக்கட்சி பொது செயலர் இ.பி.எஸ்., நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இதை ஈரோடு மாவட்டத்தில் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், நகர அவைத் தலைவர் மயில்சாமி தலைமையில், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதேசமயம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும் கோஷமிட்டனர்.
* அந்தியூரில் கட்சி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ராஜா சம்பத், உட்பட பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல் தவிட்டுப்பாளையம் மார்க்கெட், அரசு மருத்துவமனை கார்னர், பஸ் ஸ்டாண்ட் எதிரில், அவைத் தலைவர் தேவராஜ் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
* நம்பியூரில் பொலவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மணிகண்டமூர்த்தி தலைமையில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நம்பியூர் பேரூராட்சி, 12வது வார்டு உறுப்பினர் ஆண்டிக்காடு சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கங்காதரன், எலத்துார் அம்மா பேரவை செயலாளர் கதிர்வேல், நிர்வாகிகள் மயில்சாமி, மொட்டணம் செல்வம், நாகரனை கணேசன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்கள் குழு