/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல்
/
பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 13, 2024 04:11 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நேற்று சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.பொங்கல் திருநாள் வரும், 15ல் கொண்டாடப்படும் நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு, இன்று முதல் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்றே பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் வண்ண கோலமிட்டு, கரும்பு, பூக்கள், அலங்காரம் செய்து சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். அரசு அலுவலகங்கள், கல்லுாரிகளில் வேட்டி, புடவை அணிந்து ஆண், பெண்கள் பங்கேற்றனர். பள்ளிகளில் பெண் குழந்தைகள் விதவிதமான ஆடைகள் அணிந்தும், பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் மகிழ்ந்தனர்.ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகேயுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் பொங்கல் வைத்து, மாணவியருக்கு வழங்கினர்.* பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு, நகர்மன்ற தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். பொங்கல் வைத்து, பசு மாட்டுக்கு பூஜை செய்து வழிபட்டனர். கமிஷனர் மோகன்குமார், கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர்.* ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் முன்னிலையில் நடந்த விழாவிற்கு, மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சமத்துவ பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. மண்டல அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.