ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு
ADDED : ஜூன் 21, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சுயநிதி
பிரிவில் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா நடந்தது.
தி முதலி யார்
எஜுகேசன் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தாளாளர் பாலுசாமி முன்னிலை உரையாற்றினார்.இயக்குனர்
வெங்கடாசலம் வரவேற்றார். முதல்வர் சங்கரசுப்பிரமணியன்
வாழ்த்துரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல
பேச்சாளரும் பேராசிரியருமான பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு
பேசினார். விழா நிறைவாக சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளம்பரிதி
நன்றி கூறினார். விழாவில் முதலாமண்டு மாணவ, மாணவியர், அவர்களின்
பெற்றோர் கலந்து கொண்டனர்.
