ADDED : ஜூன் 21, 2026 04:21 AM
பவானி:துாத்துக்குடி
மாவட்டம் திருவரங்கம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 50; பவானி
அருகே காலிங்கராயன்பாளையத்தில் வசித்தார். அவுட்டர் பைபாஸில் ஒரு
ஹோட்டலில் வேலை செய்தார்.
இரு நாட்களுக்கு முன் சக்திவேல்,
மூவேந்தர் நகர் சாலையோரத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது சண்டை
போட்ட தெருநாய்களை விரட்டியபோது, அமர்ந்திருந்த மோரி மீது இருந்து
சாக்கடையில் விழுந்து விட்டார். கோவை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
* நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 26, கூலி தொழிலாளி.
மது பழக்கம் உடையவர். போதையில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ஷேர் ஆட்டோ ஸ்டேண்ட்
அருகே நடந்து சென்றபோது சாக்கடையில் தவறி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்த
நிலையில் இறந்தார்.
