/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உலக 'பவர் லிப்டிங்' போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீரர்
/
உலக 'பவர் லிப்டிங்' போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீரர்
உலக 'பவர் லிப்டிங்' போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீரர்
உலக 'பவர் லிப்டிங்' போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீரர்
ADDED : டிச 02, 2025 01:15 AM

ஈரோடு: உலக அளவிலான, 'பவர் லி டிங் சாம்பியன்ஷிப்' போட்டி, தாய்லாந்தின் பட்டாயா நகரில் நவம்பரில் நடந்தது.
இதில் இந்தியா, இலங்கை உட்பட, 20 நாடுகளை சேர்ந்த, 267 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம் பெற்ற, 30 பேரில், 19 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
புல் பவர் லிப்டிங், பென்ஞ்ச் பிரஸ் மற்றும் டெட் பவர் லிப்டிங், சிங்கிள் பவர் லிப்டிங் அடிப்படையில், டீன்ஸ், சப்-ஜூனியர், ஜூனியர், ஓபன், மாஸ்டர் என்ற பிரிவுகளில், 44 கிலோ, 52 கிலோ, 56 கிலோ என, பெண்களுக்கு எட்டு விதமான எடை பிரிவுகளிலும், ஆண்களுக்கு, 11 விதமான எடை பிரிவுகளிலும் போட்டி நடந்தது.
இதில், ஈரோடு சூரம்பட்டிவலசை சேர்ந்த திவாகர், 56 கிலோ எடை பிரிவில் டெட் பவர் லிப்டிங் போட்டியில், மூன்றாவது சுற்றில், 185 கிலோ துாக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
திவாகர் கூறுகையில், ''ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் பி.காம்., இறுதியாண்டு படிக்கிறேன். தமிழ்நாடு மெச்சூர் பவர் லிப்டிங் அசோசியேஷனில் பயிற்சி பெற்றேன். இதற்கு உறுதுணையாக இருந்த மாஸ்டர்கள் கார்வேந்தன், ராஜசேகர் மற்றும் பெற்றோருக்கு நன்றி,'' என்றார்.

