ADDED : ஜூலை 30, 2026 01:16 AM
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறி-வியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நாளை (31) முதல் ஆக., 11 வரை, 12 நாட்க-ளுக்கு புத்தகத்திருவிழா நடக்க உள்ளது.
இதுபற்றி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குண-சேகரன், அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு புத்தகத்திரு-விழா, 22ம் ஆண்டாக நாளை மாலை, 5:00 மணிக்கு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் துவங்குகி-றது. அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், விஜய்பாலாஜி உட்பட பலர் பங்கேற்கின்றனர். 230 அரங்கு
கள் அமைக்கப்பட்டு, தமிழ் பதிப்பகங்கள், பன்னாட்டு ஆங்கில பதிப்பகங்களின் அரங்குகள் அமைகின்றன.
உலக தமிழர் படைப்பரங்கம், நுால் வெளியீட்டு அரங்கம், கதை சொல்லல் நிகழ்வு நடக்கிறது. தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை புத்தகத்திருவிழா அரங்குக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தினமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடக்கி-றது. இதில், தமிழருவி மணியன், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தினமணி ஆசி-ரியர் கே.வைத்தியநாதன், திருப்பூர் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், முன்னாள் துணை வேந்தர் பால
குருசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ், விஞ்-ஞானி மயில்சாமி அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
