தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, குமலன்குட்டையில் உள்ள மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், மண்டல ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடந்த, 14 ஆண்டுக்கு மேலாக மாநில ஊரக வாழ்வாதார இயக்-கத்தில், திட்ட களப்பணியாளராக பணி செய்கிறோம். எங்கள் பணிக்கேற்ற ஊதியம், அங்கீகாரம் கிடைக்கவில்லை. அனைவ-ரையும் பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வுக்கு வழி செய்ய வேண்டும். அடிப்படை ஊதிய உயர்வு வழங்கி, மாவட்ட அலுவ-லகத்தில் இருந்து பணியாளர் வங்கி கணக்கில் நேரடியாக ஊதி-யத்தை செலுத்த வேண்டும்.பணியாளர் ஊதியத்தை, 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். பணி காலத்தில் கடந்த, 2019 முதல் தற்போது வரை இறந்த பணியாளர்களின் குடும்பங்-களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை நேரடி விசாரணை செய்து, தகுதி

யானவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சுய உதவிக்-குழு பயிற்றுனர்களுக்கு மதிப்பூதிய உயர்வு வழங்க வேண்டும். புத்தக பராமரிப்பாளர்களுக்கு மதிப்பூதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும்,

என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us