/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக., 1 முதல் 12 வரை ஈரோடு புத்தக திருவிழா
/
ஆக., 1 முதல் 12 வரை ஈரோடு புத்தக திருவிழா
ADDED : ஜூலை 17, 2025 02:03 AM
ஈரோடு, மாவட்ட நிர்வாகம், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தகத்திருவிழா-2025 ஆக., 1 முதல், 12 வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்க உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: புத்தக வாசிப்பை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. ஈரோடு புத்தகத் திருவிழா, 230 அரங்குகளுடன் அமைக்கிறது. வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்தும் பதிப்பாளர்கள் வருகை தந்து, அரங்குகள் அமைக்கின்றனர். குறிப்பிட்ட புத்தகங்களுக்கு தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சி தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும். மாலையில் சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.