* ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 574 மூட்டைகள் வரத்தாகின. வெள்ளை ரகம் கிலோ, 116.19 ரூபாய் முதல் 145.16 ரூபாய்; கறுப்பு ரகம், 118.96 ரூபாய் முதல் 143.96 ரூபாய்; சிவப்பு ரகம், 124.89 முதல் 143.59 ரூபாய் வரை, 42,736 கிலோ எள், 58.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, ௧௯ மூட்டை வரத்தானது. கிலோ, 65.89 ரூபாய் முதல், 97.29 ரூபாய் வரை விற்றது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர்க கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 20 ரூபாய், நேந்திரன், 25 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 380, தேன்வாழை, 460, செவ்வாழை, 730, ரஸ்த்தாளி, 450, பச்சைநாடான், 320, ரொபஸ்டா, 310, மொந்தன், 200 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 6,000 வாழைத்தார்களும், 6.56 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 15,139 தேங்காய் வரத்தானது. கிலோ, 27.16 ரூபாய் முதல், 31.91 ரூபாய் வரை, 5,232 கிலோ தேங்காய், 1.53 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 1,817 மூட்டை வரத்தானது. கறுப்பு எள் கிலோ, 118.09 ரூபாய் முதல், 148.99 ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 119.09 ரூபாய் முதல், 149.09 ரூபாய்; வெள்ளை ரகம், 137.22 ரூபாய் முதல், 141.22 ரூபாய் வரை, 1.35 லட்சம் கிலோ எள், 1.89 கோடி ரூபாய்க்கு விலை போனது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகச் சேர்ந்த விவசாயிகள், 4,348 மூட்டைகளில், 2.03 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் குறைந்த பட்சம் ஒரு கிலோ, 88.06 ரூபாய் முதல் ௧௦௦ ரூபாய்; இரண்டாம் தரம், 20.65 ரூபாய் முதல், 9௪ ரூபாய் வரை, 1.88 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன் படி நடந்த கொப்பரை ஏலத்தில் 1575 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 94.40 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.61.20 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1லட்சத்து 34 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல் எள் ஏலத்துக்கு, 2,262 கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 120.39 ரூபாய் முதல், 140.09 ரூபாய் வரை ஏலம் போனது.