ADDED : நவ 29, 2026 06:50 AM
ஈரோடு:மதுரை
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, ஈரோடு மாநகர் மாவட்ட ஹிந்து
முன்னணி சார்பில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதியில்
நேற்று பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும்
கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
இதில்
ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணியினர்
பங்கேற்றனர். முன்னதாக நேற்று காலையே கொண்டாட்டத்தை தவிர்க்க
போலீஸ் அதிகாரிகள், ஹிந்து முன்னணி பிரமுகர்களை அழைத்து
அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதேபோல் ஈரோடு தெற்கு பா.ஜ.,
மற்றும் ஹிந்து முன்னணியை சேர்ந்தவர்கள், திருப்பரங்குன்றத்தில்
தீப துாணில் தீபம் ஏற்றுவதை காண நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றனர்.
இம்முறை போலீஸ் கெடுபிடிகள் ஏதுமில்லை. மாறாக ஒவ்வொரு பகுதியில்
இருந்து எத்தனை பேர் எந்த வாகனங்கள் வாயிலாக செல்கின்றனர் என்பதை
மட்டும், போலீசார் குறிப்பெடுத்து கொண்டனர்.
