ADDED : நவ 04, 2026 07:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சாஸ்திரி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சிலம்பரசன், 39;
ஈரோட்டில் நடந்த அடிதடி வழக்கில் தொடர்புடைய இவர் தலைமறைவானார்.
டிச.,12க்குள் ஈரோடு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.3ல் நீதிபதி
முன் ஆஜராக வேண்டும். இல்லையேல் தலைமறைவு குற்றவாளியாக
அறிவிக்கப்படுவார்.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி நேருவீதியை
சேர்ந்தவர் சாகுல், 34; திருட்டு வழக்கில் தொடர்புடைய இவர்
தலைமறைவாகி விட்டார். இவரும் டிச.,12க்குள் ஈரோடு நீதித்துறை நடுவர்
நீதிமன்றம் எண்.3ல் நீதிபதி முன் ஆஜராக வேண்டும். இல்லையேல் தலைமறைவு
குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். இத்தகவலை சூரம்பட்டி போலீஸ்
இன்ஸ்பெக்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
