/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்ட காங்., தலைவர்கள் பொறுப்பேற்பு
/
ஈரோடு மாவட்ட காங்., தலைவர்கள் பொறுப்பேற்பு
ADDED : ஜன 23, 2026 04:46 AM
ஈரோடு: தமிழக அளவில் காங்., கட்சியில், மாவட்ட தலைவர்கள் சமீ-பத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர்.
இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவராக முத்துகுமார், வடக்கு மாவட்ட தலைவராக உதயகுமார் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் மாவட்ட காங்., அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்-றனர். இதை தொடர்ந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா படங்க-ளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா கூறியதாவது: தமிழ-கத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் வகையில் உழைப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்குவது குறித்தும் மற்றும் யாருடன் கூட்டணி, தொகுதி, வேட்பாளர்களையும் கட்சி தலைமை முடிவு செய்து அறி-விக்கும். இவ்வாறு கூறினார்.

