ADDED : ஆக 31, 2011 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (34); விவசாய கூலித்தொழிலாளி.
ஒரு மாதத்துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு தனது மனைவி சண்முகவள்ளியுடன் (19), பைக்கில் பவானிக்கு வந்தார். ரைஸ்மில் மேடு அருகே வந்த போது, பைக்கின் பின்புறமாக, 'ஈச்சர்' வேன் மோதியது. சம்பவ இடத்திலேயே சண்முகவள்ளி பலியானார். வேன் டிரைவர் சம்பத் தலைமறைவானார்.

