sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

/

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி


ADDED : செப் 15, 2011 02:25 AM

Google News

ADDED : செப் 15, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி, மீண்டும் துவங்கியது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் 2,000 பேர் உள்நோயாளிகளாகவும், 5,000 பேர் வரை வெளிநோயாளிகளாகவும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள், அலுவலகர்கள், துப்புரவாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆரம்பகாலத்தில் மருத்துவமனை கழிவுகள், மாநகாட்சி சாக்கடையுடன் இணைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு வந்தது. மருத்துவமனை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுகளின் வீரியத்தன்மையை குறைத்து, பின்னர், மாநகர சாக்கடையில் கழிவுநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசு மருத்துவமனையில், பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 1.34 லட்சம் ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு முன், குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் பணி துவங்கியது. முதற்கட்டமாக, மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடந்தது.



ஆரம்பத்தில் வேகமாக நடந்த பணிகள், கிடப்பில் போடப்பட்டது. இதுபற்றி, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டிடங்களில் குழாய் முலமாக வரும் கழிவுநீரை தேக்க, மூன்று பெரிய தொட்டிகள் கட்டும் பணி ஜரூராக நடக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஈரோடு உதவி செயற்பொறியாளர் கூறியதாவது: மருத்துவமனை கழிவுநீரை பாதாள சாக்கடை குழாய் மூலமாக எடுத்து வந்து, தலா நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரப்பி, கழிவு நீரின் வீரியத்தன்மையை குறைத்து, கழிவுநீரில் இருந்து திட கழிவுப் பொருளை பிரித்து, அதன் பின், மாநகராட்சி சாக்கடையில் விடப்படும். பிரிக்கப்பட்ட திடக்கழிவை காயவைத்து, விவசாய உரமாக வழங்கப்படும். தற்போது, மூன்று தொட்டிகள் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. அதன் பின், கருவிகள் பொருத்துதல் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவு வேலை செய்யப்படும். 2012 ஜனவரிக்குள் பணிகள் முடிக்கப்படும், என்றார்.










      Dinamalar
      Follow us