/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐரோப்பிய மருத்துவர்கள் மாநாட்டில் ஈரோடு பெண் டாக்டருக்கு அங்கீகாரம்

ADDED : ஜூலை 08, 2025 01:14 AM
ஈரோடு, ஒன்றிணைந்த ஐரோப்பிய நாடுகளின், இனப்பெருக்கம் மற்றும் கருவாக்க மருத்துவர்கள் மாநாடு, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்தது. இதில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கருவாக்க நிபுணர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஜெனிசிஸ் ஐ.வி.எப்., அதி நவீன கருத்தரித்தல் மைய தலைமை மருத்துவர் ஸ்ரீரேவதி சதாசிவமும் பங்கேற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து பேசினார். இவரின் ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டது. இவரது ஆராய்ச்சி வயது முதிர்ந்த பெண்களின் கருத்தரித்தல் தன்மையை அதிகப்படுத்தும் அதிநவீன சிகிச்சை முறை பற்றியதாகும். இவர் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை, கருத்தரங்கின் இணையதளத்தில் நிரந்தர ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் மிக சிறந்த படைப்புகள் மட்டுமே வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மகப்பேறு மற்றும் கருவாக்க மருத்துவர்கள், கருவாக்க தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து, ஸ்ரீரேவதி சதாசிவத்துக்கு பாராட்டு விழா எடுத்து சிறப்பித்தனர். இதில் ஈரோடு மற்றும் சென்னை சேர்ந்த பல மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.