/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடமாறுதலில் ஆளுங்கட்சி அழுத்தம் ஈரோடு சத்துணவு ஊழியர் வருத்தம்
/
இடமாறுதலில் ஆளுங்கட்சி அழுத்தம் ஈரோடு சத்துணவு ஊழியர் வருத்தம்
இடமாறுதலில் ஆளுங்கட்சி அழுத்தம் ஈரோடு சத்துணவு ஊழியர் வருத்தம்
இடமாறுதலில் ஆளுங்கட்சி அழுத்தம் ஈரோடு சத்துணவு ஊழியர் வருத்தம்
ADDED : ஜூன் 25, 2025 01:13 AM
ஈரோடு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொடுமுடி யூனியன் மலையம்பாளையம் நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கவிதா, 25 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர். காலி பணியிடங்கள் உள்ளதை கருத்தில் கொண்டு, அவர் கேட்கும் இடங்களுக்கு மாறுதல் வழங்காமல் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேநேரம் வேறு ஒரு சத்துணவு அமைப்பாளருக்கு ஆளும் கட்சி அழுத்தத்தால் பணியிடம் வழங்கப்படுகிறது. தற்போது பாசூர் மேல்நிலைப்பள்ளிக்கு கவிதா மாற்றப்பட்டு ஒரு மாதமாகியும், அங்கு பணி செய்யும் மைதிலி, பணியை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதுபோன்ற ஆளும் கட்சி அழுத்தங்களுக்கு இடம் வழங்காமல், சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.