தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு--கரூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

ஈரோடு--கரூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

ஈரோடு--கரூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்


ADDED : அக் 23, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், 'ரயில் ஜன் சம்வாத்' பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன்படி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் சமூக ஆர்வலர், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மக்கள், பயணிகள் என பல்வேறு தரப்பினருடன் கூட்டம் நடந்தது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தலைமை வகித்தார். இதில் அவர் பேசியதாவது:

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், 41 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில், மூன்று அலங்கார வளைவுகள் கட்டப்பட்டுள்ளன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய நடைபாதை கட்டப்பட்டு வருகிறது. இதில் புதிதாக நகரும் படிக்கட்டு, லிப்ட் அமைக்கப்பட உள்ளன. உயர் வகுப்பு காத்திருப்பு அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நவீன தகவல் மையங்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிகள் ஏற்படுத்தப்படும். 10 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே ஸ்டேஷன் கட்டட பணிகளும் நடந்து வருகின்றன. ஈரோடு மின்சார இன்ஜின் பணிமனை சிறந்த பணிமனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,059 ரயில்கள் பரிசோதனை செய்யப்பட்டு, 63 சிறப்பு ரயில்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. ஈரோடு--கரூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. ரயில்களில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இளங்கவி, மகேஷ் கிரி, சமூக ஆர்வலர் சரவணன் மற்றும் பயணிகள் பேசும்போது, ஈரோடு ஸ்டேஷனில் கூடுதலாக பிளாட்பாரங்கள் வேண்டும். பயணிகள் அமரும் பகுதிகளில் நிழற்கூரை மற்றும் வசதிகள் தேவை. சேலம்--கோவை ரயிலை தடையின்றி இயக்க வலியுறுத்தினர்.

கூட்டம் முடிந்ததும் ரயில்வே ஸ்டேஷனில் புதுப்பிக்கப்பட்டுள்ள உயர் வகுப்பு காத்திருப்போர் அறையை, ரயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us