/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.14 லட்சம் மோசடி ஈரோடு ஆசாமி கைது
/
ரூ.14 லட்சம் மோசடி ஈரோடு ஆசாமி கைது
ADDED : செப் 03, 2025 12:56 AM
ஈரோடு, ஓசூர், பாகலுாரை சேர்ந்தவர் நக்கீரன் துரை. ஆலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு தேவையான ஆயில் வியாபாரம் செய்கிறார். ஈரோடு பெரிய சேமூர் வேளாண் நகர் பகதுார் பாஷா, 45; கடந்த, 2023 டிச.,ல் ஆயில் வாங்கியுள்ளார். இதற்கான, ௧4 லட்சம் ரூபாய்க்கு செக் தந்துள்ளார்.
வங்கியில் நக்கீரன் துரை செலுத்தியபோது பணமின்றி திரும்பியது. தன்னை ஏமாற்றிய பகதுார் பாஷா மீது நடவடிக்கை கோரி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தார். போலீசார் கண்டு கொள்ளாததால், சென்னை காவல்துறை இயக்குனரகத்தில் புகாரளித்தார்.
அவர்கள் அறிவுறுத்தலின்படி துாக்கம் விழித்த வீரப்பன்சத்திரம் போலீசார், வழக்குப்பதிந்து பகதுார் பாஷாவை நேற்று கைது செய்தனர்.