/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
ஈரோட்டில் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஈரோட்டில் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஈரோட்டில் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : செப் 30, 2024 06:52 AM
ஈரோடு: போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக, ஈரோட்டில் நடந்த மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில், 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக, ஈரோட்டில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நேற்று நடந்தது. தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த போட்டியை, காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரங்கம்பாளையத்தில் தொடங்கி, அருகில் உள்ள கிராமங்கள் வழியாக சென்று மீண்டும், அதே இடத்தில் நிறைவடைந்தது. 5, 10, 21 கி.மீ., துாரம் என மூன்று பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவஹர் உள்பட, 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.