தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேற்பார்வையாளரை தாக்கியதை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மேற்பார்வையாளரை தாக்கியதை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மேற்பார்வையாளரை தாக்கியதை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 03, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:துாய்மை பணி மேற்பார்வையாளர், பெண் துாய்மை பணியாளர் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 38. இவர், மாநகராட்சியில் துாய்மை பணி மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரண்டாம் மண்டலம், 8-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகரில், துாய்மை பணியாளர் குழுவினருடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர், அவர் மீதும், பெண் துாய்மை பணியாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று காலை பணிகளை புறக்கணித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு

போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்ரமணி கூறியதாவது: பாரதி நகரில் துாய்மை பணி நடந்து கொண்டிருந்தது, மதுபோதையில் வந்த சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய மேற்பார்வையாளர் ராஜேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தினர். அதனை தடுக்க சென்ற பெண் துாய்மை பணியாளரையும், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.இது குறித்து வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்ட போது, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் துாய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். இதையடுத்து மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 2 மணிநேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று வீரப்பன்சத்திரம் போலீஸ் சூளை பாரதி நகரை சேர்ந்த நெப்போலியன் மகன் செபாஸ்டின், 28, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us