ரேஷன் கடைகளில் இன்று முதல் பெரிய வெங்காயம் விற்பனை
ரேஷன் கடைகளில் இன்று முதல் பெரிய வெங்காயம் விற்பனை
ADDED : செப் 03, 2026 05:54 AM
ஈரோடு:மழை
இன்மை, உற்பத்தி சரிவால் பெரிய வெங்காயம் கிலோ, 70 முதல், 90
ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், 70 ரூபாய்க்கு மேலும்
விற்பனையாகிறது. சாதாரண மக்கள் தினசரி உணவில் பயன்படுத்தப்படும்
பெரிய வெங்காயத்தை, கூட்டுறவு துறை மூலம் மொத்தமாக கொள்முதல்
செய்து, ரேஷன் மூலம் ஒருவருக்கு ஒரு கிலோ, 35 ரூபாய் விலையில் விற்க
தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில்,
கோ-ஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம், 405 ரேஷன் கடைகளில்,
விற்பனை செய்வதற்காக முதல்கட்டமாக, 50 டன் பெரிய வெங்காயம்
வரத்தாகி உள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதி, பவானி, கோபி,
சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பெருந்துறை நகராட்சி, 41
டவுன் பஞ்., பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
செய்யப்படும். விலை உயர்வு மற்றும் வெங்காயம் வரத்துக்கு ஏற்ப,
இக்கடைகளில் கூடுதலாக வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
