தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு அறிவுரை

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு அறிவுரை

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு அறிவுரை


ADDED : செப் 03, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்டரங்கில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் பாட வாரியாக வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, 1,165 ஆசிரியை, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பாடங்கள், நடப்பு கல்வியாண்டில் மாத தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டு ஆய்வு செய்து, பாட வாரியாக மாணவ, -மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கணக்கியல், வணிகவியல், இயற்பியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. வரும் 9 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us