/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கற்கும் பாரதம் மையங்களில் ஆணைய ஆலோசகர் ஆய்வு
/
கற்கும் பாரதம் மையங்களில் ஆணைய ஆலோசகர் ஆய்வு
ADDED : ஆக 11, 2011 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கற்கும் பாரதம் எழுத்தறிவு திட்ட மையங்களில், மத்திய அரசின் தேசிய எழுத்தறிவு ஆணைய ஆலோசகர் மோகன்குமார், கள ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தில் பயில்பவர்களுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுவோர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இம்மைய செயல்பாடுகள் குறித்து, ஆணைய ஆலோசகர் மோகன்குமார் ஆய்வு செய்தார். பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், கோபி வட்டாரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.