/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி கமிஷனர் யார்? பழைய போர்டால் மக்கள் குழப்பம்
/
நகராட்சி கமிஷனர் யார்? பழைய போர்டால் மக்கள் குழப்பம்
நகராட்சி கமிஷனர் யார்? பழைய போர்டால் மக்கள் குழப்பம்
நகராட்சி கமிஷனர் யார்? பழைய போர்டால் மக்கள் குழப்பம்
ADDED : ஆக 21, 2011 02:33 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டில் கமிஷனர் பெயர் மாற்றப்படாமல் உள்ளதால், தற்போதைய கமிஷனர் யார்? என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.
கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. குடிநீர் வசதி, சாக்கடை வசதி, பிறப்பு, இறப்பு பதிவு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கும், வரி செலுத்தவும், ஏராளமான மக்கள் நகராட்சிக்கு வந்து செல்கின்றனர். கோபி நகர் முழுவதும் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் ரோட்டில் செல்வது வாடிக்கையாக உள்ளது. பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் கோபி நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது. நகராட்சி கமிஷனராக இருந்த குப்பமுத்து, சென்ற மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக ஜான்சன் உள்ளார். புதிய கமிஷனர் பதவி ஏற்று 20 நாட்களாகிறது. நகராட்சி வளாகத்தின் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த போர்டில் கமிஷனர் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. போர்டில், 'தகவல் அறியும் உரிமை சட்டம், தகவல் பெற அணுகவேண்டிய அலுவலர்கள். மேல் முறையீட்டு அலுவலர் ஆணையாளர் குப்பமுத்து' என, பழைய கமிஷனர் பெயர் உள்ளது. மக்களின் குழப்பத்தை தீர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

