/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விதிமுறையை மீறி கார், டூவீலரில் காஸ் பயன்பாடு விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்
/
விதிமுறையை மீறி கார், டூவீலரில் காஸ் பயன்பாடு விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்
விதிமுறையை மீறி கார், டூவீலரில் காஸ் பயன்பாடு விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்
விதிமுறையை மீறி கார், டூவீலரில் காஸ் பயன்பாடு விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்
ADDED : செப் 04, 2011 12:26 AM
ஈரோடு: ஈரோட்டில் வாகன விதிமுறைகளை மீறி, கார் மற்றும் டூவீலர்களில் பெட்ரோலுக்கு பதிலாக, காஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கிலும், கார், ஆட்டோ ஆகியவற்றில் எரிபொருளாக, எல்.பி.ஜி., காஸ் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
கார், ஆட்டோக்கள் விற்பனைக்கு வரும்போதே, காஸ் மூலம் இயங்க ஏதுவாக இன்ஜினில் சில மாற்றங்கள் செய்து, காஸ் கிட் மற்றும் சிலிண்டர் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதற்கு, ஆர்.டி.ஓ.,விடம் மேல் ஒப்பம் (என்டாஸ்மெண்ட்) பெற வேண்டும். ஆனால், மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிறுவனங்கள் பலவும், உதிரிப் பாகங்களை தாங்களே வாங்கி, அசம்பிள் செய்து, குறைந்த கட்டணத்தில் 10 ஆயிரம் முதல், 16 ஆயிரம் ரூபாய்க்குள், 'காஸ் கிட்' பொருத்தி தருகின்றனர்.
இத்தகைய வாகனங்களுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகம் அனுமதி வழங்குவதில்லை. தவிர, விபத்து ஏற்படும் போது, காப்பீடும் கிடைக்காது. இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்கூட்டர், எம்.80, டி.வி.எஸ்.-50 ஆகிய வண்டிகளுக்கும், 'காஸ் கிட்' தயாரித்து, சிலர் பயன்படுத்தி வருகின்றனர். டூவீலரில் பெட்டி இருக்கும் இடத்தில் காஸ் டேங்க் அமைத்து, வீட்டு சிலிண்டருக்கு பயன்படுத்தும் ரெகுலேட்டரை பொருத்தி, அதிலிருந்து குழாய் மூலமாக, இன்ஜினுடன் இணைத்துள்ளனர்.
டூ ஸ்ட்ரோக் இன்ஜினாக இருப்பதால், வழக்கமாக உள்ள பெட்ரோல் டேங்க்கினுள் ஆயிலை விட்டு, இன்ஜினுக்கு செல்லும்படியாக செய்துள்ளனர். மூன்று கிலோ காஸுக்கு 200 கி.மீ., வரை செல்வதாக கூறுகின்றனர். ஆனால், இதுபோன்ற, 'காஸ் கிட்' டூவீலரில் பொருத்த அரசு அனுமதிக்கவில்லை. வண்டியில் பொருத்தப்பட்ட சிலிண்டர், கிட், குழாய் ஆகியவை தரமாக இருப்பதில்லை. விபத்து ஏற்பட்டு வண்டி சாயும் போது, சிலிண்டர் டேங்க் நேரடியாக ரோட்டில் பட்டு, வெடிக்கக்கூடும். சம்பந்தப்பட்ட வாகனம் மட்டும் இன்றி, அருகில் வருவோருக்கும் பாதிப்பு ஏற்படும். ஈரோடு மாவட்டத்தில் கிராமங்களை தேர்வு செய்து, காயலாங்கடைகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களிலும், இதுபோன்ற, 'காஸ் கிட்' பொருத்தியுள்ளனர். இத்தகைய வாகனங்கள், அனுமதியின்றி, 'காஸ் கிட்' பொருத்தும் நிறுவனங்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

