/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிதாக இரண்டு கோவிகளில் அன்னதான திட்டம் துவக்கம்
/
புதிதாக இரண்டு கோவிகளில் அன்னதான திட்டம் துவக்கம்
ADDED : செப் 12, 2011 03:56 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில், மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அறநிலையத்துறை மூலம் கோவில்களில், ஏழை, எளிய மக்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக, தமிழக அரசு நிதி வழங்கியது. அன்னதான திட்டம் நடக்கும் கோவில்களில், அன்னதானத்துக்கான உண்டியல் வைத்தும், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கியும், 10, 25, 50 ரூபாய் நன்கொடை வழங்கலாம். ஒருநாள் மற்றும் ஆயுள் சந்தாவுக்கு பணம் செலுத்தி அன்னதான திட்டம் நடைபெற உதவலாம். இத்திட்டத்துக்கு செலுத்தும் பணத்துக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில், பெரியமாரியம்மன் கோவில் உள்பட13 கோவில்களில், ஏற்கனவே அன்னதான திட்டம் செயல்படுகிறது.நேற்று ஈரோடு வ.உசி., பார்க் மகாவீர ஆஞ்சநேயர் கோவில், கோபி செட்டிபாளையம் பச்சமலை சுப்பிரமணியர் கோவில் ஆகியவற்றில் அன்னதான திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.
அறநிலையத்துறை துணை இயக்குனர் அழகர்சாமி தலைமையில், மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கிட்டுசாமி துவக்கி வைத்தார். ஆர்,டி.ஓ., சுகுமார், திண்டல் முருகன் கோவில் செயல் அலுவலர் அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் சாப்பிட்டனர்.செவ்வாய், சனிக்கிழமை நாட்களில், 60 பேருக்கும், மூலநட்சத்திரம், கிருத்திகை நாட்களில், 100 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இதற்காக அன்னதான உண்டியல் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய, 1,500 ரூபாய், 15 ஆயிரம் செலுத்தி ஆயுள்சந்தா வைத்துக்கொள்ளலாம். அரிசி, தானியங்கள் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என, கேட்டுக் கொண்டனர்.