நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்,
சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், உலக ஓசோன் தின விழா நடந்தது.பள்ளி
தலைமை ஆசிரியர் ராஜாராம் தலைமை வகித்தார்.
ஓசோன் படலம் காப்போம், புவி
வெப்பம் அடைவதால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில், ஆசிரியர்கள்
புவனேஸ்வரி, சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.மாணவ, மாணவியர்களிடையே 'பசுமை
வெப்பம், புவி வெப்ப காரணிகள்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி, 'ஓசோன் படலம்
காப்போம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது.மாணவ, மாணவிகள்
ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி உதவி
தலைமை ஆசிரியர் நசீர், பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள்
செல்வராஜ், சுமதி, சரவணமுத்து, தேன்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.