/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் எஸ்.எஸ்.ஏ.,பயிற்றுனர் தற்கொலை
/
அந்தியூர் எஸ்.எஸ்.ஏ.,பயிற்றுனர் தற்கொலை
ADDED : செப் 22, 2011 02:13 AM
அந்தியூர்: எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர் தற்கொலை செய்து
கொண்டார்.நாமக்கல் மாவட்டம் பாய்ச்சல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்;
நூலகராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி தீபலட்சுமி (28); அந்தியூரில்,
'அனைவருக்கும் கல்விஇயக்கத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிந்தார்.
இருவரும் அந்தியூர் ஆண்கள் பள்ளி அருகே வாடகை வீட்டில் வசித்து
வந்தனர்.நேற்று காலை அந்தியூர், நஞ்சமடை குட்டை பள்ளிக்கு சென்ற
தீபலட்சுமி, பணி முடித்து நடந்தே அந்தியூர் நோக்கி வந்தார். வழியில்
பாலகுட்டை வடிவேலு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் குதித்தார்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தீபலட்சுமியை மீட்டு மேலே கொண்டு
வந்தனர். அதற்குள் அவர் இறந்து போனார்.அந்தியூர் போலீஸார்
விசாரிக்கின்றனர்.