/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் 134ல்; 56 ஓட்டுச்சாவடி பதட்டமானவை
/
கோபியில் 134ல்; 56 ஓட்டுச்சாவடி பதட்டமானவை
ADDED : செப் 27, 2011 12:16 AM
கோபிசெட்டிபாளையம் :உள்ளாட்சி தேர்தலில் கோபி யூனியனில் 134 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றில் 56 ஓட்டுசாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கோபி யூனியனில் 21 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. பஞ்சாயத்து வாரியாக ஓட்டுகள் விவரம்: அளுக்குளி பஞ்சாயத்தில் 12 வார்டுகளில் 5,054 வாக்காளர்கள், அம்மாபாளையம் ஆறு வார்டு 805, அயலூர் ஒன்பது வார்டு 4,290, பொம்மநாயக்கன்பாளையம் ஒன்பது வார்டு 4,020, சந்திராபுரம் ஆறு வார்டு 1,282 வாக்காளர்கள் உள்ளனர்.
கடுக்காம்பாளையம் ஒன்பது வார்டு 1,633, கலிங்கியம் 12 வார்டு 6,932, கோட்டுபுள்ளாம்பாளையம் 12 வார்டு 4,553, குள்ளம்பாளையம் ஒன்பது வார்டு 2,124, மேவானி ஒன்பது வார்டு 1,594, மொடச்சூர் 12 வார்டு 5,087, நாகதேவம்பாளையம் ஒன்பது வார்டு 3,285, நஞ்சைகோபி ஒன்பது வார்டு 2,313, நாதிபாளையம் ஆறு வார்டு 954, பாரியூர் ஒன்பது வார்டு 1,492 வாக்காளர்கள் உள்ளனர்.
பெருந்தலையூர் ஒன்பது வார்டு 2,593, பொலவகாளிபாளையம் ஒன்பது வார்டு 3,665, சவண்டப்பூர் ஒன்பது வார்டு 2,741, சிறுவலூர் 12 வார்டு 5,684, வெள்ளாங்கோவில் ஒன்பது வார்டு 3,790, வெள்ளாளபாளையம் ஒன்பது வார்டு 4,491 வாக்காளர்கள் உள்ளனர். கோபி யூனியனில் 21 பஞ்சாயத்துகளுக்கும் 134 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கோபி செங்கோடப்பா பள்ளி, வேங்கையம்மையார் பள்ளி, மொடச்சூர் அரசு பள்ளி, கலிங்கியத்தில் ஐந்து ஓட்டுசாவடி, பொம்மநாய்க்கன்பாளையத்தில் இரண்டு, பொலவகாளிபாளையம் நான்கு, வெள்ளாங்கோவிலில் இரண்டு, ஓடக்காட்டூர் மூன்று, திங்களூர் இரண்டு, நல்லாம்பட்டி நான்கு, நம்பியூர் நான்கு, கூடக்கரை மூன்று, அளுக்குளி மூன்று, கவுந்தபாடி இரண்டு, புதூரில் இரண்டு, ஓடத்துறையில் இரண்டு மொத்தம் 56 ஓட்டுசாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.