/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் தி.மு.க., வேட்பாளர் மீது அதிருப்தி
/
கோபியில் தி.மு.க., வேட்பாளர் மீது அதிருப்தி
ADDED : செப் 27, 2011 12:16 AM
கோபிசெட்டிபாளையம்: கோபியில் தி.மு.க.,வினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபி நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக சத்யா, களமிறங்க உள்ளார். சேர்மன் பதவியை குறி வைத்து நகராட்சி துணைத்தலைவி மோகனாம்பாள், கவுன்சிலர் செந்தில்வடிவு ஆகியோர் காய் நகர்த்தினர். அவர்களின் முயற்சி வீணாகியது.
துணைத் தலைவர் மோகனாம்பாளுக்கு 24வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கவுன்சிலராக போட்டியிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளதால், தி.மு.க., அளித்துள்ள வாய்ப்பை புறக்கணிக்கிறார். கோபி நகராட்சி 20வது வார்டுக்கு மணிகண்டன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2001, 2006 ல் கவுன்சிலருக்கு போட்டியிட்ட பழனியம்மாள் என்பவரின் மருமகன் மணிகண்டன், இவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளதால் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கோபி நகராட்சியில் சேர்மன் பதவி முதல் கவுன்சிலர் பதவி வரையான தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யாமல், செலவை மட்டுமே குறிக்கோளாக வைத்து சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க., நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.