sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை

/

கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை


ADDED : செப் 29, 2011 01:14 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்:கோபி பகுதியில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுவதை போலீஸார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கந்துவட்டி கொடுமையால் கோபியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.கோபி பகுதியில் நூல் கம்பெனி மற்றும் பாசன வயல்களில் வேலை செய்ய வெளியூரை சேர்ந்த ஏராளமானோர், இங்கு தங்கி வேலை பார்க்கின்றனர். கோபி பகுதியில் நடுத்தர மக்களும் அதிகளவில் உள்ளனர். நடுத்தர மக்களின் வறுமையை பயன்படுத்தி கொள்ளும் கந்து வட்டி கும்பல், குறிப்பிட்ட தொகையை கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக்கி விடுகின்றனர். 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால், கடன் கொடுக்கும் போது 3,000 ரூபாய் பிடித்துக்கொண்டு மற்ற தொகை தருகின்றனர்.வாரம் 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு வாரம் தவறினால் 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இது ஒருவகையான கந்து வட்டி.10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால், கடன் கொடுக்கும் போது 1000 ரூபாய் பிடித்துக்கொண்டு 9,000 ரூபாய் கொடுப்பர். 100 நாளுக்கு தினசரி 100 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு நாள் பணம் கொடுக்கவில்லை என்றால் குறிப்பிட்ட அபராதம் கட்ட வேண்டும்.

இரவில் 10 ஆயிரம் ரூபாய் வாங்கினால், விடிந்தவுடன் 1,500 ரூபாய் கூடுதலாக சேர்ந்து மொத்தம் 11 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க வேண்டும். இவ்வாறாக பலவிதங்களில் வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.கந்து வட்டியை போலீஸார் கண்டும் காணாதுமாக இருக்கின்றனர். கந்து வட்டியால் கோபியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கோபி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் இளவரசன். மனைவி ராணி. ஹேமேஸ்வரன்(2) என்ற குழந்தை உள்ளது. ராணியின் அம்மா விஜயலட்சுமி, பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். கந்து வட்டிக்கு ராணி ஜாமீனாக இருந்துள்ளார். விஜயலட்சுமி சரியாக கடன் கட்டாததால், கடன்தாரர்கள் ராணியை தொந்தரவு செய்தனர்.மனவேதனையடைந்த ராணி, சாணிபவுடரை குடித்து விட்டார். மயக்கமடைந்த ராணியை, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கோபி போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us